LOADING

Type to search

சினிமா

தனுஷின் ‘கர’ படத்தின் கண்ணம்மா பாடல் வெளியானது

Share

போர் தொழில்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கர’. இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் 1990-களில் ராமநாதபுரத்தில் நடந்த வங்கிக் கொள்ளை பற்றிய கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. கிராமத்து கதைக்களத்தில் ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 30-ந்தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ‘கர’ படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி ‘கண்ணம்மா என் கண்ணம்மா’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. தனுஷ் எழுதி பாடியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.