LOADING

Type to search

உலக அரசியல்

ஈரானில் புதைக்கப்பட்டு உள்ள யுரேனியத்தை தோண்டி எடுப்போம் – டிரம்ப்

Share

ஈரானுக்கு எதிரான போரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள அமெரிக்கா, அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. ஈரானில் கடந்தாண்டில் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு நடவடிக்கையின்போது புதைக்கப்பட்ட பி 2 குண்டுகளில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஈரானுடன் கைகோத்து நிச்சயம் ஆழத் தோண்டியெடுக்கப்படும் என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியாகத் தெரிவித்திருக்கிறார். ஈரானில் இனி யுரேனியம் செறிவூட்டப்படாது என்றும் டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். கடந்த ஜூன் மாதத்துக்குப்பிறகு ஈரான் அவற்றை தொடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். எனினும் டிரம்பின் இந்த அறிவிப்பு குறித்து ஈரான் எதுவும் தெரிவிக்க வில்லை. ஈரான் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும் என்று செவ்வாய்க்கிழமை சூளுரைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது நிலைப்பாட்டை அதன்பின் மாற்றிக்கொண்டதன் எதிரொலியாக அமெரிக்கா ஈரான் இடையே அடுத்த 2 வாரங்கள் போர்நிறுத்தம் நீட்டிக்கப்படுகிறதென அறிவிக்கப்பட்டது.