LOADING

Type to search

உலக அரசியல்

புகழ்பெற்ற மலைக்கோட்டை சுற்றுலா தலத்தில் கூட்ட நெரிசல் – 30 பேர் பலி

Share

கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவு நாடுகளில் ஹைதியும் ஒன்றாகும். இந்நாட்டில் உள்ள மலைகள், கடற்கரைகள், பாரம்பரிய சின்னங்களை காண லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். குறிப்பாக, வடக்கு ஹைதியின் மிலாட் நகரில் மலை மீது சிடடெல் ஹென்றி என்ற லபெரியர் கோட்டை உள்ளது. பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெற்றபிறகு புரட்சியாளர் ஹென்றி கிறிஸ்டோப் தலைமையில் இந்த மலைக்கோட்டை கட்டப்பட்டது. உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழும் இந்த மலைக்கோட்டையில் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறையை முன்னிட்டு நேற்று திருவிழா நடைபெற்றது. இதில் உள்ளூர், வெளிநாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டனர். அப்போது அங்கு திடீரென கனமழை பெய்தது. இதனால் அங்கிருந்தவர்கள் மழையில் நனைந்துவிடாமல் இருக்க பாதுகாப்பான இடங்களை தேடி ஓடினர். அப்போது சுற்றுலாப்பணிகளிடையே தள்ளுமுள்ளு எற்பட்டு அது கூட்டநெரிசலாக மாறியது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.