LOADING

Type to search

சினிமா

கான் சிட்டி படத்தின் ‘கொரியன் ஃபேமிலி’ பாடல் வெளியீடு

Share

அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அன்னா பென் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளப் படம் கான் சிட்டி. இவர்களுடன் யோகி பாபு, வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. கடந்த மாதம் இப்படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான கொரியன் ஃபேமிலி வெளியாகி உள்ளது. வெளியான ஒருமணிநேரத்திலேயே ரசிகர்களிடையே இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், அடுத்த ஒருவாரத்திற்கு இப்பாடல்தான் இன்ஸ்டா டிரெண்ட் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.