LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழ்நாட்டில் இதுவரை ரூ.438 கோடி பறிமுதல் – தேர்தல் ஆணையம் தகவல்

Share

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2026: தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ. 865 கோடியைத் தாண்டியது 

  1. அஸ்சாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காள சட்டப்பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் மார்ச் 15, 2026 அன்று அறிவித்தது. தேர்தல் நடத்தை விதிகளை கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய மாநில/யூனியன் பிரதேச அரசாங்கங்களுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
  2. தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் அவற்றின் எல்லை மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகள், டிஜிபிக்கள் மற்றும் அமலாக்க முகமைகளின் தலைவர்களுடன் ஆணையம் பலமுறை ஆய்வுக் கூட்டங்களை நடத்தியது. வன்முறையற்ற, மிரட்டல்களற்ற மற்றும் தூண்டுதல்களற்ற தேர்தல்களை உறுதி செய்ய அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
  3. இதனை உறுதி செய்வதற்காக, புகார்கள் மீது 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய இரு மாநிலங்களிலும் 5,011-க்கும் மேற்பட்ட (மேற்கு வங்கத்தில் 2,728 மற்றும் தமிழ்நாட்டில் 2,283) பறக்கும் படைகள் பணியமர்த்தப்பட்டுள்ளன. இது தவிர, வெவ்வேறு இடங்களில் திடீர் சோதனைகளை மேற்கொள்ள 5,363-க்கும் மேற்பட்ட (மேற்கு வங்கத்தில் 3,142 மற்றும் தமிழ்நாட்டில் 2,221) நிலையான கண்காணிப்புக் குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன.
  4. 2026 பிப்ரவரி 26 அன்று தேர்தல் பறிமுதல் மேலாண்மை அமைப்பு செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து, 2026 ஏப்ரல் 17 வரையிலான தரவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: