LOADING

Type to search

சினிமா

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” படப்பிடிப்பு நிறைவடைந்தது

Share

துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்த படம் சுமார் 11 மாதங்கள் நீளமாக, மொத்தம் 156 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். “ஐ ஆம் கேம்” படம், துல்கர் சல்மானின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய படமாக உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு வெற்றி பெற்ற “லோகா” படத்திற்குப் பிறகு  வே பாரவர் பிலிம்ஸ் நிறுவனம் வழங்கும் அடுத்த முக்கிய படமாககும்.  இந்தப் படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். கதையை ஷஹாபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து எழுதியுள்ளனர். இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், தமிழ் நடிகரும் இயக்குனருமான மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தொழில்நுட்ப குழு விவரங்கள்: லைன் தயாரிப்பாளர்: பிபின் பெரும்பில்லி ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித் இசை: ஜேக்ஸ் பிஜாய் எடிட்டிங்: சமன் சாக்கோ தயாரிப்பு நிர்வாகிகள் : சுஜோய் ஜேம்ஸ், தேவதேவன் தயாரிப்பு வடிவமைப்பு: அஜயன் சாலிசேரி மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர் உடை வடிவமைப்பு: மஷார் ஹம்சா!தயாரிப்பு ஒருங்கிணைப்பு : தீபக் பரமேஸ்வரன் உதவி இயக்குநர் : ரோஹித் சந்திரசேகர் பாடல்வரிகள் : மனு மஞ்சித், விநாயக் சசிகுமார் விஎப்எக்ஸ்: தௌஃபீக் எக்வொயிட்  பதாகை வடிவமைப்பு: டென் பாயிண்ட் ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா சவுண்ட்  மிக்ஸ்: கண்ணன் கணபதி ஸ்டில்ஸ்: எஸ்.பி.கே மார்க்கெட்டிங் தலைவர் : விஜீத் விஸ்வநாதன் மக்கள் தொடர்பு : யுவராஜ்.