LOADING

Type to search

சினிமா

“அமர்க்களம்” படம் வரும் 24ம் தேதி மறு வெளியீடு

Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் கடந்த 1990ஆம் ஆண்டு வெளியான படம் ‘அமர்க்களம்’. காதல் மற்றும் ஆக்ஷன் கதைக்களத்தில் வெளியான இந்த படம் அஜித்குமாரின் ரசிகர்களுக்கு பிடித்த படங்களுள் ஒன்றாகும். இந்த படத்தால்தான் அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரை வாழ்க்கையிலும் பெரிய திருப்பமே ஏற்பட்டது. சரண் இயக்கிய இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஷாலினி நடித்திருப்பார். மேலும் ரகுவரன், ராதிகா, நாஸர், அம்பிகா, வினு சக்ரவர்த்தி, சார்லி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதினார், பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்து படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தன. இந்நிலையில், அஜித் – ஷாலினி திருமண நாளை முன்னிட்டு இருவரும் இணைந்து நடித்த ‘அமர்க்களம்’ படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு வரும் 24ம் தேதி மறு-வெளியீடு செய்யப்பட உள்ளது. இதற்கிடையில், இந்தபடத்தின் மறு வெளியீடு முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.