மாதவன் நடிக்கும் ‘ரன்’படம் வெளியாகததால் ரசிகர்கள் ஏமாற்றம்
Share
23 ஆண்டுகளுக்கு பிறகு மாதவன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ‘ரன்’ திரைப்படம் புத்தம் புது பொலிவுடன் தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகாவில் ஏப்.24-ந்தேதி முதல் வெளியாகும் ன இயக்குனர் லிங்குசாமி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், ‘ரன்’ திரைப்படம் மீண்டும் வெளியாவது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் இயக்குனர் லிங்குசாமி கூறியிருப்பதாவது:- ‘சிவகாசி’ திரைப்படமும் ஏப்.24-ந்தேதி வெளியாவதால், எங்களின் ‘ரன்’ திரைப்படத்தை வேறு ஒரு தேதியில் மீண்டும் வெளியிட முடிவு செய்துள்ளோம், அது பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் ‘ரன்’ திரைப்படம் இன்று வெளியாகவில்லை. கடந்த 2002-ம் ஆண்டில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் இணைந்து நடித்து வெளியான படம் ‘ரன்’. காதல், ஆக்ஷனில் உருவான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தில் வித்யாசாகர் இசையில் உருவான பாடல்களும் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.















