ஈரானுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்கத் தயார் – இஸ்ரேல்
Share
அமெரிக்கா- ஈரான் இடையே அறிவிக்கப்பட்ட 2 வார கால தற்காலிக போர் நிறுத்தம் முடிவடைந்தது. மத்தியஸ்தம் செய்து வரும் பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று ஈரானுடனான போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் காரணமாக 2-வது கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரான் மறுத்து வரும் நிலையில் போர் நிறுத்த நீட்டிப்பை அமெரிக்கா அறிவித்தது. இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கூறியதாவது: ஈரானுடன் போரை மீண்டும் தொடங்க இஸ்ரேல் தயாராக உள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆகிய தயாரிப்புகளை முடித்துவிட்டன. மேலும் இலக்கு தேர்வும் இறுதி செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலை அழிக்க நினைக்கும் ஈரான் ஆட்சியின் தலைமை வாரிசுகளுமான காமேனி குடும்பத்தை முழுமையாக ஒழிப்பதற்கு நாங்கள் அமெரிக்காவின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம். ஈரானை மீண்டும் இருளுக்கும் கற்காலத்திற்கும் தள்ளுவதற்காக, நாங்கள் முக்கிய எரிசக்தி மற்றும் மின்சார வசதிகளைத் தகர்த்து, அந்த நாட்டின் பொருளாதார உள்கட்டமைப்பைச் சீர்குலைப்போம். இந்த முறை, தாக்குதல் மீண்டும் தொடங்கும்போது அது வித்தியாசமாகவும் கொடியதாகவும் இருக்கும் என்றார்.















