யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் விடுதிக்கு உணவு வழங்குவோர் மீது பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் பரிசோதனை…
Share
திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்கு உட்பட்ட பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் வெளியார் நிறுவனம் நீண்டகாலமாக உணவு வழங்கி வருகின்றது.
இந்த நிறுவனம் தொடர்பில் தொடர்ச்சியான பல முறைப்பாடுகள் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனிற்கு கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினர் 30ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் 30.04.2026 இரவு நேரத்தில் பரிசோதனை மேற்கொள்ள விடுதிகளிற்கு சென்று உணவு வழங்குவோரிடம் திடீர் பரிசோதனை மேற்கொண்டனர். இனங்காணப்பட்ட குறைபாடுகள் தொடர்பில் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டதோடு, குறைபாடுகளை விரைந்து நிவர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
இவ்விடயம் தொடர்பில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், எதிர்காலத்தில் தொடர்ந்து குறைபாடுகள் இனங்காணப்படும் இடத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.















