உக்ரைன் பயணிகள் மினி பேருந்து மீது தாக்குதல் நடத்திய ரஷியா – 2 பேர் உயிரிழப்பு
Share
உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள கெர்சன் நகரில் பயணிகள் மினி பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏழு பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில் மற்றொரு மினி பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஓட்டுநர் காயம் அடைந்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களில் ரஷியாவின் நான்கு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் ஏற்றுமதி முனையம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் ரஷியா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. மினி பேருந்துகளை தவிர்த்து கருங்கடலில் உள்ள துறைமுக கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஒடேசா நகரில் உள்ள துறைமுக கட்டமைப்புகள் சேதமடைந்ததுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைனின் வடகிழக்கில் உள்ள சுமி பிராந்தியத்தின் மைரோபில்லியா கிராமத்தை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. ஆனால், உக்ரைன் இதற்கு உடனடியாக பதில் ஏதும் அளிக்கவில்லை.















