LOADING

Type to search

இந்திய அரசியல்

பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் வெற்றி

Share

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. சட்டசபை தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட்டார். தமிழகத்தில் மொத்தமுள்ள 234 இடங்களில் 101 இடங்களில் தவெக முன்னிலை பெற்றுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றுள்ளார். அவர் 1,00,582 வாக்குகள் பெற்று 44,583 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியிலும் தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றுள்ளார். அவர் 82,885 வாக்குகள் பெற்று 26,432 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2001, 2006, 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. 2016-ம் ஆண்டு அதிமுக வேட்பாளர் வெற்றிவேல் வெற்றி பெற்றார். 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தல் மற்றும் 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது நடந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர் தொகுதி, திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றுள்ளார்.

தவெக தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதிகள் முதன்மையாக பெண்களை மையமாகக் கொண்டிருந்தன. மேலும் மாதாந்திர நிதி உதவி, இலவச சமையல் எரிவாயு தோம்புகள், அரசு பேருந்துகளில் இலவச பயணம், ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மணப்பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை , பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் வரவேற்பு கிட், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்காக பிரத்யேக பாதுகாப்பு குழுக்கள் ஆகியவை அடங்கும்.