ஜெயலலிதாவின் படத்தை பார்த்து அழுதபடியே பதவியேற்ற எம்.எல்.ஏ..
Share
தமிழகத்தில் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழக சட்டசபைக்கு புதிதாகத் தேர்வான உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்களாகப் பதவியேற்று வருகின்றனர். இடைக்கால அவைத் தலைவர் சோழவந்தான் கருப்பையா உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். முதலில் தமிழக முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாகப் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் மற்ற உறுப்பினர்களும் பதவியேற்று வருகின்றனர். அந்தவகையில், பண்ருட்டி எம்.எல்.ஏ மோகனை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் பதவி ஏற்க வருமாறு அழைத்தார். இருக்கையில் இருந்து எழுந்து வந்த மோகன்.. சட்டமன்ற பேரவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தா.மோகன் என்ற நான் சட்டமுறைப்படி நிறுவப்பட்ட இந்திய அரசலமைப்பின்பால் சட்டத்தின் உண்மையான நம்பிக்கையும் பற்றுதியும் கொண்டிருப்பேன் என்று இந்திய நாட்டின் இறையாண்மையை ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்று நான் மேற்கொள்ள இருக்கும் கடமையை நேர்மையாக நிலைநிறுத்துவேன் என்று கடளவுறிய உறுதி கூறுகிறேன். மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா..அம்மா எங்களுக்கு ஆசிர்வாதம் பண்ணுங்க என்று நா பதவியேற்கும் போது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா படத்தை பார்த்து கண்கலங்கி அழுதார் பண்ருட்டி எம்.எல்.ஏ மோகன். அந்த நேரத்தில் ஒரு நிமிடம் சட்டசபையே நிசப்தம் ஆனது. முதல்-அமைச்சர் விஜய் இந்த நிகழ்வை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்.















