அமெரிக்கா: சிறிய ரக விமானம் வீட்டின் மீது விழுந்து விபத்து – 2 பேர் மரணம்
Share
அமெரிக்காவின் ஒஹியோ மாகாணம் அக்ரான் விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4 மணியளவில் சிறிய ரக விமானம் புறப்பட்டது. விமானத்தில் 2 பேர் பயணித்தனர்.
விமான நிலையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென அக்ரான் பகுதியில் உள்ள வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானம் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 2 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















