LOADING

Type to search

சினிமா

அர்ஜுனின் “பிளாஸ்ட்” படத்தின் ‘தி ரேஜ்’ பாடல் வெளியானது

Share

அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘பிளாஸ்ட்’ படத்தில் அர்ஜுனன் நடித்துள்ளார். சுபாஷ் கே ராஜ் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அப்பா – மகளுக்கு இடையே நடக்கும் கதையாக இப்படம் உருவாகி உள்ளதாக திரையுலகில் பேசப்படுகிறது. இந்த படத்திற்கு கே.ஜி.எப் இசையமைப்பாளர் ரவி பசூர் இசையமைத்துள்ளார். ‘பிளாஸ்ட்’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ’தணிக்கை சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த நிலையில், ‘பிளாஸ்ட்’ படத்தின் ‘தி ரேஜ்’ பாடல் வெளியானது. இப்படம் வரும் 28ம் தேதி வெளியாகவுள்ளது.