முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் இங்கிலாந்தின் இலண்டன் மாநகரிலும் அனுஷ்டிக்கப்பெற்றது!
Share
(19-05-2026)
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு தினமான மே-18 நினைவேந்தல் லண்டனில் இடம் பெற்றது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
















