“We must not only pay our tribute to Victims of the Sri Lankan Government’s Genocide, but also remember the suffering they endured.”
Share
– Brampton’s City Councillor for wards 7 & 8: Rod Power
“இலங்கை இனப்படுகொலை காரணமாக மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அப்பால்,அவர்கள் அனுபவித்த துன்பங்களையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.”
– பிரம்ரன் மாநகர கவுன்சிலர் றொட் பவர் தெரிவிப்பு
“முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் ஞாபகார்த்தமாக பிரம்ரன் மாநகரில் நினைவுத்தூபியை நிறுவிய பிரம்ரன் மாநகரசபையின் குழுவில் மேயர் பெற்றிக் பிரவுண் தலைமையில் நானும் ஒருவனாக இருந்தேன் என்பதை நினைக்கும் போது நான் பெருமையடைகின்றேன். அத்துடன் நாம் இன்று இலங்கை அரசின் இனப்படுகொலை காரணமாக மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதோடு மாத்திரம் நின்றுவிடாது மரணத்தவர்கள் அனுபவித்த துன்பங்களையும் என்றும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காகவே இந்த நினைவுத்தூபி பிரம்ரன் மாநகரில் நிமிர்ந்து நிற்கின்றது”
இவ்வாறு 18-05-2026 அன்று பிரம்ரன் மாநகரில் அமைந்துள்ள ‘முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி’ இற்கு அருகில் நடைபெற்ற ‘இலங்கை அரசின் இனப்படுகொலைகள் காரணமாக மரணித்த போராளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பிரம்ரன் நகரசபையின் மேயர் பெற்றிக் பிரவுண் அவர்களின் சார்பாக உரையாற்றிய பிரம்ரன் மாநகர சபையின் 7ம் 8ம் வட்டாரங்களுக்கான கவுன்சிலர் றொட் பவர் தெரிவித்தார்.
மேற்படி நினைவு நிகழ்வில் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்வில் ஒன்றாரியோ மாகாண அரசாங்கத்தின் இணை அமைச்சரும் ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியின் மாகாண அரசின் உ றுப்பினருமான விஜேய் தணிகாசலம் மற்றும் ரொறன்ரோ நகரசபையின் உறுப்பினர் நீதன் சண்முகராஜா ஆகியோரும் உரையாற்றினார்கள். அங்கு கலந்து கொண்டவர்களுக்கு ஏற்பாட்டாளர்களால் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வழங்கப்பெற்றது.
“I am proud to recall that I was part of the Bramhan City Council committee, led by Mayor Patrick Brown, that erected a memorial in Bramhan City to commemorate the Mullivaikkal massacre. Today, we must not only pay tribute to those who died as a result of the Sri Lankan government’s genocide, but also remember the suffering they endured. That is why this Monument stands l in Bramhan City”
.-Brampton’s City Councillor for wards 7 & 8: Rod Power




















