LOADING

Type to search

இலங்கை அரசியல்

திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது

Share

மன்னார் நிருபர்

(21-05-2026)

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா 21ம் திகதி அன்றைய தினம் வியாழக்கிழமை (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

அன்றைய தினம் (21) காலை உற்சவ மூர்த்திகளுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் கொடி கம்பத்திற்கு அருகாமையில் எழுந்தருளியதை தொடர்ந்து கொடி கம்பத்திற்கு அபிஷேகம் இடம் பெற்றது.

அதனைத்தொடர்ந்து கொடியேற்ற பெருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு தியாகராஜா கருணாநந்த குருக்கள் தலைமையில் கொடியேற்றம் இடம் பெற்றது.

இதன் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.