கனடாவில் இயங்கிவரும் ‘இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்க’த்தின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பெற்றுள்ள ‘அம்மா நகை அடைவு மாடம் ‘ நிறுவன அதிபர் கிருஷ்ணகோபால்! !
Share
கனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் ‘இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்க’த்தின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பெற்றுள்ள ‘அம்மா பவுண்’ நிறுவன அதிபர் கிருஷ்ணகோபால் அவர்களை கனடாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பலர் தொடர்ச்சியாகப் பாராட்டியும் வாழ்த்துக்களைத் தெரிவித்தும் வருகின்றார்கள்.
தலைமைத்துவம்-தாராள சிந்தை-நட்புக்கான இலக்கணம்- ஊர்ப் பற்று- இனப்பற்று- சக வர்த்தகர்களோடு இணங்கியிருப்பது போன்ற நற்பண்புகளை தன்னகத்தே கொண்ட நண்பர் கிருஷ்ணகோபால் அவர்களை எவருமே ஒரு வணிகத்துறை பிரமுகராகப் பார்ப்பதில்லை.
சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணிக்கும் ஒருவராகவும் தலைமைத்துவப் பண்புகளுக்கு அடையாளமாகவும் விளங்கிவரும் இவரை தமிழ்க் கனடியர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் ‘தங்களில் ஒருவராக’வே எண்ணி உறவாடுவதுண்டு
‘அம்மா நகை அடைவுமாடம்’ என்ற வணிக நிறுவனத்தின் மூலம் தற்போது நன்கு அறிமுகமாகியுள்ள இவர் ஏற்கெனவே கனடாவில் பல வர்த்தக முயற்சிகளில் வெற்றிகரமாகப் பிரகாசித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனது பிறந்த மண்ணான ஊர்காவற்றுறை-கரம்பன் கிராமத்தின் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டவராக விளங்கும் கிருஷ்ணகோபால் அவர்கள் !இங்குள்ள ஊடக நிறுவனங்களை சார்ந்த பலரின் நெருங்கிய நண்பராகவும் அவர்களின் ஊடகச் சேவைக்காக என்றும் பக்க பலமாக விளங்குபவர் என்பது குறிப்பிடத்தக்கது.!
கனடா உதயன் ஆசிரிய பீடத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கிருஷ்ணகோபால் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.!
















