LOADING

Type to search

சினிமா

‘ஹபீபி’ படத்தின் ‘ரூஹி ரூஹி’ பாடல் வெளியானது

Share

மீரா கதிரவன் இயக்கத்தில் புதிதாக உருவாகி உள்ளப் படம் ஹபீபி. இஸ்லாமியர்களின் வாழ்வியலையும், காதலையும் மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

இதில் இயக்குநர் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் உடன் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். நேசம் என்டர்டெயிண்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு, சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

இப்படம் மே.28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சமீபத்தில் இதன் முன்னோட்டம் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் ‘ரூஹி ரூஹி’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. 

ஸ்வேதா மோகன் பாடலை பாடியுள்ளார்.