LOADING

Type to search

இந்திய அரசியல்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க முதல் – அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்

Share

தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட, தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். 

காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசால் பூமிபூஜை நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது குறித்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், காவேரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் விரிவாக ஆலோசனை மேற்கொண்டு, தொடர் சட்ட நடவடிக்கைகள் விரைவாக எடுத்திட அறிவுறுத்தினார்கள். தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில், கர்நாடக அரசால் காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ள பூமிபூஜை நிகழ்வினை தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், காவேரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், காவேரி ஆற்றின் குறுக்கே உத்தேசிக்கப்பட்டுள்ள மேகதாது அணையானது உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது என்பதால், இத்திட்டத்தை எதிர்த்து 30.11.2018 மற்றும் 7.6.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், மேகதாது அணையுடன் தொடர்புடைய இவ்வழக்கில் 13.11.2025 அன்று விசாரித்த மாண்பமை உச்சநீதிமன்றத்தில் மேகதாது அணை திட்டத்திற்கு எவ்வித அனுமதியையும் அளிக்கவில்லை என்றும், இத்திட்டம் தொடக்கநிலையில் தான் உள்ளது என்றும், இத்திட்டம் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் முந்தைய தீர்ப்பிற்கு உட்பட்டதா இல்லையா என்பதை நிபுணர்கள் அடங்கிய மத்திய நீர்வளக் குழுமம் தான் தீர்மானிக்க முடியும் என்று தெரிவித்து, இவ்வழக்குகளை முடித்து வைப்பதாக உத்தரவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மாண்பமை உச்சநீதிமன்றத்தில் 13.11.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து, தமிழ்நாடு அரசால் சீராய்வு மனு 11.12.2025 தேதியில் தாக்கல் செய்யப்பட்டது. அச்சீராய்வு மனுவானது முந்தைய ஆட்சிக்காலத்தில் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் உள்விசாரணை நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு தற்சமயம் மாண்பமை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது. மேற்கண்ட தீர்ப்பு விவரங்களைக் கருத்தில் கொண்டு விரிவான சட்ட ஆலோசனைக்குப்பின் உடனடியாக எடுக்க வேண்டிய தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கினார்கள்.