LOADING

Type to search

சினிமா

‘டிமான்ட்டி காலனி 3’ படம் ஜூன் மாதம் இறுதியில் வெளியாகிறது

Share

அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் டிமான்ட்டி காலனி. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. அஜய் ஞானமுத்து இயக்கிய ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் 3-ம் பாகம் உருவாகியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, வெளியீடுக்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் கோடையில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில், ‘டிமான்ட்டி காலனி 3’ வெளியீடு குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்தபடம் ஜூன் மாதம் இறுதி வாரத்தில் வெளியாகும் என்ற கூறப்படுகிறது. இதனால் இனிவரும் நாட்களில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.