LOADING

Type to search

சினிமா

கமலின் “சேயோன்” படத்தில் இணைந்தது பெருமையாக உள்ளதென நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் அறிவிப்பு

Share

சேயான் படத்தை கமல் ஹாசன் தயாரிக்க, இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்சே நடிக்கிறார். பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் ‘விருமாண்டி’ படத்தைப் போல கருமாத்தூர் தெய்வங்களை மையமாகக் கொண்டு, மதுரை பின்னணியில் ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கலந்த கிராமப்புற குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி வருகிறது. ‘சேயோன்’ படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து வரும் நிலையில் கமல்ஹாசனை பாக்யஸ்ரீ போர்ஸ் சந்தித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்ததில் பெருமை அடைகிறேன். உங்களை பெருமைப்படுத்தும் விதத்தில் சிறந்த பங்களிப்பை கொடுப்பேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.