LOADING

Type to search

சினிமா

நடிகர் அஜித்தின் தாயார் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்

Share

சகோதரர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன் என கமல்ஹாசன் தெரிவித்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரா அஜித்தின் தாயார் மோகினி(84)  காலை சென்னையில் வயது மூப்பு காரணமாக காலமானார். இந்த செய்தி அஜித் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்தின் தாயார் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், மநீம தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; சகோதரர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அன்பு தாயை இழந்து தவிக்கும் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.