LOADING

Type to search

இந்திய அரசியல்

ஊழல் – லஞ்சம் இல்லாத ஆட்சியை கொடுப்பேயென திருச்சியில் முதல் – அமைச்சர் ஜோசப் விஜய் பேசினார்

Share

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்திருக்கிறார். திருச்சி கிழக்கு தொகுதி தற்போது காலியாக இருந்தாலும், தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனி விமானத்தில் திருச்சி வந்தார். அவரை, விமான நிலையத்தில் அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் வரவேற்றனர். நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பேசியதாவது: தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம். எனது நன்றி. குறிப்பாக, திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு சிறப்பு வணக்கம், நன்றி. என்னை இப்போது பெரம்பூர் தொகுதி மக்கள் என்றுதான் சொல்வார்கள். தமிழகத்திற்கு எப்படி திருச்சி இதயம் மாறியோ, அதுபோல் திருச்சி கிழக்கு தொகுதி எனது கண் இமை மாதிரி. ஆட்சிக்கு வந்து 6 மாதம் அமைதியாக இருப்போம் என்றவர்கள், 6 நாள் கூட அமைதியாக இல்லை. இதுவரை உங்களை ஏமாற்றியவர்களை மாற்றி, இந்த விஜயை முதல்-அமைச்சராக, முதல் சேவகராக மாற்றி இருக்கிறீர்கள். அத்தனை பேருக்கும் தலைவணங்கி நன்றி தெரிவிக்கிறேன். தமிழக வெற்றி கழக ஆட்சி எந்தபாகுபாடும் இல்லாமல் எல்லாருக்குமாறு ஆட்சியாக இருக்கும். மாநில உரிமை, நதிநீர், சமூகநீதி எதையும் விட்டுக்கொடுக்கமாட்டோம். 234 தொகுதிகளும் நம்ம தொகுதிதான். திருச்சி கிழக்கு எனக்கு செல்லப்பிள்ளை. இடைத்தேர்தலில் உங்கள் வீட்டு பிள்ளை வேட்பாளராக நிறுத்த உள்ளோம். ஊழல் இல்லாத, லஞ்சம் இல்லாத ஆட்சியை கொடுப்பேன். ஒரு நாள் அதை நடத்தி காண்பிப்பேன். எனக்கு வேறு வேலை இல்லை. என் பணி, பணி செய்து கிடைப்பதே. இவ்வாறு அவர் பேசினார்.