LOADING

Type to search

இலங்கை அரசியல்

தியாகி பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு

Share

தியாகி பொன் சிவகுமாரனின் உயிர்த் தியாகத்தின் 52 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் உத்தியோகபூர்வ உணர்வெழுச்சி நிகழ்வாக உரும்பிராயில் உள்ள திருவுருவச்சிலையில் நடைபெற்றது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் 05-06-2026 அன்று காலை 8 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றன.

நிகழ்வில் பொது ஈகைச் சுடரினை பொன் சிவகுமாரனின் சகோதரி சிவகுமாரி அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து முக்கியஸ்தர்கள் சுடர் விளக்குகளை ஏற்றி வைத்தனர். தியாகி பொன் சிவகுமாரன் உள்ளிட்ட இன விடுதலைக்காக தம் இன்னுயினைத் தியாகம் செய்த போராளிகள் பொதுமக்களை நினைவு கூர்ந்து அகவணக்கம் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அக வணக்கத்தினைத் தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம், சட்டத்தரணி காண்டிபன், சட்டத்தரணி மணிவண்ணன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன், பிரதேச சபைத்தவிசாளாகள் சார்பில் தி.பிரகாஸ், முன்னாள் போராளிகள் சார்பாக ஈஸ்வரன் உள்ளிட்டவர்கள் சிவகுமாரனின்; திருவுருவச்சிலைக்கு மாலர்மாலை அணிவித்து கௌரவமளித்தனர். வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவருமாக கடந்த காலங்களில் இராணுவத்தினரால் தகர்க்கப்பட்ட நிலையில் மீள பிரதிஸ்டை செய்யப்பட்ட சிவகுமாரனின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மலர் வணக்கத்தினைத் தொடர்ந்து உறுதியுரையினை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் ஆற்றினார். அவ் உரையில் உள்ளுராட்சி மன்றம் ஒன்று வழங்கக்கூடிய உயரிய கௌரவமாக தியாகி பொன் சிவகுமாரின் நினைவேந்தலை தமது சபை மேற்கொள்வதாகத் தெரிவித்தார். சிவகுமாரனின் தியாகம் மற்றும் போராட்ட வடிடிவங்கள், தமிழ் மாணவர்களின் எழுச்ச pஉள்ளிட்ட வடிவங்கள் நினைவுகூறப்பட்டதுடன் தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டத்தின் முதல் வித்து தியாகி சிவகுமாரன் விடுதலை வேட்கை பற்றியும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் சிவகுமானின் காத்திரம் பற்றியும் விபரிக்கப்பட்டது.

தொடர்ந்து அஞ்சலியுரைகளை சட்டத்தரணி சி. அ. யோதிலிங்கம், நடராஜா காண்டீபன், வி. மணிவண்ணன், அரச உத்தியோகத்தர் செ.தவநாயகம், முன்னாள் அதிபர் அருந்தவபாலன், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பினைச் சேர்ந்த கோமகன், கடற்தொழில் மற்றும் காணி விடுவிப்பதற்கான அமைப்பினைச் சேர்ந்த முரளி சாவகச்சேரி உப தவிசாளர் கிசோர் ஆகியோர் ஆற்றினர். அதனைத் தொடந்து இறுதி அஞ்சலிக் கருத்துரையினை குடும்பத்தினர் சார்பாக தியாகி பொன் சிவகுமாரனின் சகோதரி சிவகுமாரியும் பிரதேச சபை சார்பாக உப தவிசாளர் தர்மலிங்கம் ஜனார்த்தனனும் ஆற்றினர்.
அஞ்சலி நிகழ்வில் அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் தலைவர்கள், பிரதேச அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள், உள்ளராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு அஞ்சலித்தனர்.

அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றுதிரண்டு சிவகுமாரனின் நினைவேந்தலை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.