LOADING

Type to search

உலக அரசியல்

காஷ்மீர் விவகாரத்தை ஐ.நாவில் மீண்டும் எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது

Share

ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஆண்டு அறிக்கை தொடர்பான பொதுச்சபை விவாதத்தின் போது, பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி ஆசிம் இப்திகார் அகமது காஷ்மீர் பிரச்சினையை எழுப்பினார். காஷ்மீர் விவகாரம் பாதுகாப்பு சபை தீர்மானங்களின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக ஐ.நா. சபையில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் பதிலளித்து பேசியதாவது: “ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பினர் பதவி என்பது மிகப்பெரிய பொறுப்பாகும் என்பதை பாகிஸ்தானுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இது பாரபட்சமான மற்றும் பொய்யான கருத்துக்களை பரப்புவதற்கான மேடை அல்ல. தனது அரசியல் நோக்கங்களை முன்னெடுக்க பாகிஸ்தான் தொடர்ந்து ஐ.நா. தளங்களை தவறாகப் பயன்படுத்தி வருகிறது. இந்தியா தனது உள்நாட்டு விவகாரமாகக் கருதும் விஷயங்கள் குறித்து பாகிஸ்தான் தவறான தகவல்களை பரப்பி வருகிறது. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகவே இருந்தது, இருக்கிறது, இனியும் எப்போதும் இருக்கும். இதற்கு முரணான எந்தக் கூற்றும் ஆதாரமற்றது. வரலாற்று உண்மைகளுக்கு எதிரானது. பாகிஸ்தானின் வெற்றுப் பேச்சுகளும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் இந்த அடிப்படை யதார்த்தத்தை மாற்ற முடியாது” என்றார். மேலும், ஐ.நா. பாதுகாப்பு சபையில் விரிவான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.