தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லையென சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்
Share
அ.தி.மு.க.வை சேர்ந்த 25 உறுப்பினர்களும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளித்திருந்தனர். கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததற்காக பெருந்துறை ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. 25 பேரை தகுதிநீக்கம் செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் முதலில் மனு அளிக்கப்பட்டது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி 4 கடிதங்களை அனுப்பியுள்ளார். 4 கடிதத்தையும் முறையாக பரிசீலித்து ஆய்வு நடவடிக்கை மேற்கொண்டேன் பேரவை விதியை மனதில் ஏற்றுக்கொண்டேன். தமிழக வெற்றி கழத்திற்கு ஆதரவு அளித்த 21 அ.தி.மு.க. உறுப்பினர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை இல்லை.. 21 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும் மன்னிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அளித்தததை தொடர்ந்து தகுதி நீக்க நடவடிக்கை இல்லை. கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததற்காக பெருந்துறை ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. 4 பேர் மீதான நடவடிக்கை முடிந்ததும் அறிவிப்பேன் என்றார்.
















