LOADING

Type to search

சினிமா

விஜய்யின் “மெர்சல்” திரைப்படம் ஜூன் 19ம் தேதி மறுவெளியீடாகிறது

Share

முதல்-அமைச்சர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி ‘மெர்சல்’ திரைப்படம் ஜூன் 19 ஆம் தேதி மறுவெளியீடாகிறது. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த 61வது படமான ‘மெர்சல்’ கடந்த 2017ம் ஆண்டு வெளியானது. படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்திருந்தார். கதாநாயகிகளாக காஜல் அகர்வால், 

சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் நடித்திருந்தனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், நான் கடவுள் ராஜேந்திரன், கோவை சரளா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் எச்.ஜே. சூர்யா வில்லனாக நடித்திருந்தார். 2017 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இப்படம் சுமார் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி ‘மெர்சல்’ திரைப்படம் ஜூன் 19 ஆம் தேதி மறுவெளியீடு செய்யப்படுகிறது.