கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நடைபெற்ற ‘பனை வளம்’ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு !
Share
உலகப்பனை தினம் என பனை வள ஆர்வலர்கள் யூன் 6 ஆம் நாள் கொண்டாடியதை ஒட்டி பனை வளம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 10.06.2026 புதன்கிழமை காலை நடைபெற்றது
கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அச்சு வேலி பனை தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்க முகாமையாளர் கிருஷ்ணன் வரதராஜா அதிதி பேச்சாளராக கலந்து கொண்டார்
கலாசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் பகீர்த்தனா சிவதர்ஷன் அதிதி அறிமுக உரையாற்றினார்
தமிழ் இலக்கியங்களில் பனை என்ற பொருளில் ஆசிரிய மாணவி செல்வகுமாரி தியாகராஜா சிறப்புரையாற்றினார். ஆங்கில நெறி ஆசிரிய மாணவி கௌசிகா நிரோஜன் பனை வளம் குறித்த விழிப்புணர்வு காணொளியை தயாரித்து திரையிட்டார்.
















