அமைதி ஒப்பந்தம் மிக நெருக்கத்தில் உள்ளதென ஈரான் வெளியுறவு அமைச்சர் தகவல் தெரிவித்தது
Share
அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் இருநாடுகளும் முன்னெப்போதையும் விட மிக நெருக்கமான நிலையில் இருக்கின்றன என்று ஈரான் தெரிவித்தது. இது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி அளித்த பேட்டியில் கூறியதாவது: அமெரிக்காவுடனான எங்கள் பேச்சுவார்த்தைகளின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்தவுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு அறிவிக்கப்படும். கையெழுத்திடும் நிகழ்வு முதலில் டிஜிட்டல் முறையில் நடைபெறும்.இரு தரப்பினரும் தொலை தூரத்தில் இருந்தே கையெழுத்திடுவார்கள். அதன்பிறகு, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்பினராலும் கையெழுத்திடப்பட்டதாக அறிவிக்கப்படும். இது வரும் நாட்களில் நடைபெறக் கூடும். இதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். அதிகாரப்பூர்வ அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் இருநாடுகளும் முன்னெப்போதையும் விட மிக நெருக்கமான நிலையில் இருக்கின்றன. இந்த ஒப்பந்தத்தில் லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அம்சங்களும் இடம்பெறும்” என்றார்.
















