LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கலை மன்றம் களுக்கிடையிலான மாவட்ட மட்டத்திலான குழுப் பாடல் (கிராமிய) போட்டிகள்

Share

மன்னார் நிருபர்

2026 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண பண்பாட்டு அபிவிருத்தி செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் பதிவு செய்யப்பட்ட கலை மன்றம் களுக்கிடையிலான மாவட்ட மட்டத்திலான குழுப் பாடல் (கிராமிய) போட்டிகள் 16ம் திகதி செவ்வாய்க்கிழமை (16-06-2026) மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

இப்போட்டிகள் மன்னார் மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் இ. நித்தியானந்தன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் .ம.பிரதீப், அனர்த்த முகாமைத்துவ சேவைகள் உதவிப் பணிப்பாளர் . க. திலீபன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் திருமதி . எம்.ரி.வி.பி றெவெல் ஆகியோரும் அருட்தந்தை, கலாசார உத்தியோகத்தர்கள், பயிற்றுவிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

போட்டி முடிவுகளில்,
1.முதலாம் இடம்
புனித கார்மேல் அன்னை கலாமன்றம் (நானாட்டான்)

2.இரண்டாம் இடம்
புனித மரிய கொறற்றி கலைமன்றம்(மடு)

3.மூன்றாம் இடம்
கலையருவி கலைஞர் மன்றம் (மன்னார்)

4.நான்காம் இடம்
கலை கலாசார மன்றம் (மாந்தை மேற்கு)

5.ஐந்தாம் இடம்
புனித யோசெப் வாஸ் கலைமன்றம்
(முசலி)
ஆகிய இடங்களையும் பெற்றுக்கொண்டனர்.