LOADING

Type to search

இந்திய அரசியல்

இமாசல பிரதேசம்: சொகுசு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 7 பேர் பலியாகினர்

Share

இமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் சத்ரண்ட் பகுதியருகே மஸ்ரூண்ட்-ஹாமல் சாலையில் அதிகாலை நவீன சொகுசு வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியானார்கள். பலத்த காயமடைந்த மற்றொருவர் சிகிச்சை பலனின்றி பலியானார். அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. எனினும், விபத்துக்கான உண்மையான காரணம் பற்றி இன்னும் தெரிய வரவில்லை. உயிரிழந்தவர்களுக்கு முதல்-அமைச்சர் சுக்வீந்தர் சிங் சுக்கு இரங்கல் தெரிவித்து கொண்டார். பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகளை செய்யும்படி மாவட்ட நிர்வாகத்தினருக்கு உத்தரவிட்டு உள்ளார்.