கனடாவின் 159வது பிறந்த தினக் கொண்டாட்டத்தில் விசேட அழைப்பின்பேரில் கலந்து கொண்ட ;வீரகேசரி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஶ்ரீகஜன் அவர்கள்
Share
கனடாவின் 159வது பிறந்த தினக் கொண்டாடும் வகையில் இவ்வருடத்திற்கான ‘கனடா தினம்’ கொழும்பிலுள்ள இலங்கைக்கான கனடிய தூதுவராலயத்தால் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது. மேற்படி வைபவத்தில் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்நாட்டு வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் இலங்கை அரசின் பிரதிநிதிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் அழைக்கப்பெற்றிருந்தனர்.
மேற்படி கொண்டாட்டத்திற்கு விசேட அழைப்பின்பேரில் கலந்து கொண்ட ;வீரகேசரி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஶ்ரீகஜன் அவர்கள் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) அவர்களோடு உரையாடுகையில் கனடிய தேசத்திற்கான தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து தனது அண்மைய கனடிய விஜயம் தொடர்பான இனிய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
கொழும்பிலிருந்து ஜனகன்















