LOADING

Type to search

இந்திய அரசியல்

கரூரில் 31 பேருக்கு அரசுப்பணி ஆணைகளை தமிழக முதலமைச்சர் விஜய் வழங்கினார்

Share

கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் விஜய், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி ஆணைகளை வழங்கினார். 31 பேருக்கு அரசுப்பணி, 

சாந்தி என்பவருக்கு மட்டும் ரூ.10 லட்சம் கருணைத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனந்தஜோதி, நிவேதா, சங்கவி, திவ்யா, கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல் ஆகியோர் பள்ளிக்கல்வித்துறையில் இளநிலை உதவியாளராக நியமனம். கலைச்செல்வி, சதீஸ்குமார், விமல் கரூர் மாவட்ட வருவாய் அலகு அலுவலக உதவியாளராக நியமனம். பா.ரகுநாதன், யோகேஷ்குமார் கரூர் மாவட்ட வருவாய் அலகு இரவு காவலராக நியமனம். மகாலட்சுமி, பா.தனலட்சுமி கரூர் மாவட்ட காவல்துறை இளநிலை உதவியாளராக நியமனம். மோனிஷா, சந்திரலேகா கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இளநிலை உதவியாளராக நியமனம். பிரபாகரன், சர்மிளா ஆகியோர் கரூர் மாவட்ட பதிவுத்துறை இளநிலை உதவியாளர், சுதன் கரூர் மாவட்ட அலகு அலுவலக உதவியாளராக நியமனம். முதலமைச்சர் விஜய்,”கரூர் கம்பெனி ஓனர் ஒருவர் எங்கிருக்கார் என்றே தெரியாத அளவுக்கு ஓடு ஓடு என ஓடுகின்றனர். மற்றொருவர் சிங்கப்பூரில் ஒளிந்து கொண்டிருக்கிறார். ஸ்டாலின் சாரை சொல்லவில்லை.. எனக்கு எப்போதுமே ஸ்டாலின் சார் மேல் தனி பாசம் உண்டு. ஒழுங்கா படி ஒழுங்கா படி என உச்சநீதிமன்றம் சம்மட்டியால் அடித்தும் திமுக விழித்துக் கொள்ளவில்லை. தீய சக்தியை திருத்தவும் முடியாது, எனவே அவர்களை இடைத்தேர்தலில் அவர்களை வெளுத்து விடுங்கள். தாங்கள் ஆட்சியில் இருப்பதாக நினைத்து கரூருக்கு முதல்வர் செல்லக்கூடாது என திமுக சொல்கிறது” என்றார்.