LOADING

Type to search

இந்திய அரசியல்

பாடகி ஜானகியின் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்

Share

பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்ட எஸ். ஜானகி ஜியின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். பல தலைமுறை இந்தியர்களுக்கு, அவரது குரல் அன்பு, பக்தி, மகிழ்ச்சி மற்றும் ஏக்கத்தின் இசையாக விளங்கியது. அபாரமான நளினத்துடன் பல மொழிகளில் பாடி, இசை எனும் உலகளாவிய மொழியின் மூலம் பிராந்தியங்களைக் கடந்து மக்களை அவர் ஒன்றிணைத்தார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கோடிக்கணக்கான அபிமானிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.