LOADING

Type to search

உலக அரசியல்

வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது

Share

வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்தனர். இதையடுத்து, அமெரிக்கா, ஈரான் இடையே போர் மூண்டது. மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. பின்னர், பேச்சுவார்த்தை மூ லம் இரு தரப்பு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்கா, ஈரான் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகின் முக்கிய வர்த்தக பாதையாக திகழும் ஹர்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற சரக்கு கப்பல் மீது ஈரான் இன்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஹர்முஸ் ஜலசந்தியை மூடிவதாக ஈரான் அறிவித்தது. இந்நிலையில், வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அதன்படி, ஜோர்டன், பஹ்ரைன், குவைத், கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. வளைகுடாவில் அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்தும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.