டிரம்ப்பின் 20 சதவீத வரி விதிப்பு அறிவிப்பு மிக அதிகம் நாங்கள் நேர்மையாக இருப்போமென ஈரான் அறிவித்தது
Share
டிரம்ப் அறிவித்த 20 சதவீத வரி விதிப்பு என்பது மிக அதிகம் நாங்கள் நேர்மையாக இருப்போமென ஈரான் அறிவித்துள்ளது. ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் தீவிரமடைந்து உள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியை எளிதில் கடந்து செல்லும் வகையில், வர்த்தக கப்பல்களின் போக்குவரத்து பாதுகாப்பிற்காகவும் மற்றும் கடல்சார் ஊழியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் நோக்கிலும் ஈரானுக்கு எதிராக அதிகளவிலான தாக்குதல்களை அமெரிக்க படை தொடங்கியுள்ளது என அந்நாடு தெரிவித்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஈரானிய படைகளின் திறனை குறைக்கும் வகையில், அமெரிக்க பாதுகாப்பு படை தளபதியின் உத்தரவின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் வர்த்தக கப்பல் ஒன்றை ஈரான் தாக்கியதற்கு பொறுப்பேற்க செய்யும் வகையில் ஈரானிய படைகளுக்கு எதிராக இந்த தாக்குதல் நடந்துள்ளது என அமெரிக்கா தெரிவித்து உள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் கப்பல்களை திடீரென ஈரான் கடுமையாக தாக்கியது. இதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா ஈரானை தாக்கி வருகிறது. இந்த பரபரப்பான சூழலில், ஈரானை இலக்காக வைத்து, ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்க கடற்படை மீண்டும் முற்றுகையிடும் என டிரம்ப் அறிவித்து உள்ளார். தொடர்ந்து அவர் கூறும்போது, ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் கடந்து செல்லும் கப்பல்களுக்கு 20 சதவீதம் கட்டணம் வசூலிப்போம் என கூறினார். இந்த சூழலில் ஈரானின் வெளியுறவு துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி வெளியிட்ட செய்தியில், அமெரிக்க அதிபர் டிரம்ப் முற்றிலும் சரியாக கூறியிருக்கிறார். ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் வர்த்தக கப்பல்கள் பாதுகாப்பாக பயணிப்பதற்கான சேவையை வழங்குவதற்காக கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். எப்போதும் ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியின் பாதுகாவலராக ஈரான் உள்ளது. தொடர்ந்து எப்போதும் அப்படியே இருக்கும். 20 சதவீதம் என்பது மிக அதிகம். நாங்கள் நேர்மையாக நடந்து கொள்வோம் என டிரம்ப்பின் வரி விதிப்புகளை சுட்டிக்காட்டி தெரிவித்து உள்ளார்















