LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய்குமாரின் பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது

Share

தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய்குமாரின் பதவி காலம் அடுத்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய்குமார். இவரை கடந்த ஏப்ரல் 23ம் தேதி தலைமை செயலாளராக தேர்தல் ஆணையம் நியமித்தது. சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு முன்னாள் தலைமை செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு சாய்குமார் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். 1990ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சாய்குமார் மதுரை, தர்மபுரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றியுள்ளார். மேலும், தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் அவர் பணியாற்றியுள்ளார். இதனிடையே, தலைமை செயலாளர் சாய்குமாரின் பதவிகாலம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைய இருந்தது. ஆனால், சாய்குமாரின் பதவி காலத்தை நீட்டிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு தலைமை செயலாளர் சாய்குமாரின் பதவி காலத்தை 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 30ம் தேதியுடன் நிறைவடைய இருந்த தலைமை செயலாளர் சாய்குமாரின் பதவி காலம் ( 6 மாதங்கள் நீட்டிப்பு) அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.