Ontario Liberal Candidate for Scarbrough Southwest, Ahsan-ul-hafiz visited Canada Kanthaswamy Temple and was blessed by Priests!.
Share
கனடா கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்றிருந்த ஸ்காபுறோ தென்மேற்கு மாகாணத் தொகுதிக்கான லிபரல் கட்சி வேட்பாளர் அசனுக்கு குருமார் ஆசி வழங்கினர்!
விரைவில் நடைபெறவுள்ள ஒன்றாரியோவின் ஸ்காபுறோ தென் மேற்கு (Scarbrough Southwest,) தொகுதிக்கான இடைத்தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற அசன் அல் ஹவிஸ் அவர்கள் (Candidate Ahsan-ul-hafiz) அண்மையில் அதே தொகுதியில் உள்ள கனடா கந்தசுவாமி ஆலயத்திற்கு ஆசி பெறுவதற்காகச் சென்றிருந்தார்.
அங்கு அவரை வரவேற்ற ஆலயத்தின் நிர்வாக சபையினரும் ஆலயக் குருக்கள்மாரும் காளாஞ்சி வழங்கி அவருக்கு ஆசி வழங்கினர். மேற்படி சந்திப்பு தொடர்பாக தமிழ் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்த பொழுது ‘ கனடா கந்தசுவாமி ஆலயமானது தமிழ் மக்களின் ஒரு அடையாளமாக இந்த தொகுதியில் திகழ்கின்றது என்றும் இந்த ஆலயம் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை தீர்த்து வைப்பதற்கு என்னால் ஆன ஆதரவை வழங்குவேன் என்று தெரிவித்தார்.
இங்கு காணப்பெறும் படங்கள் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்















