LOADING

Type to search

உலக அரசியல்

ஈரானின் பாலங்களை தகர்க்க போகிறோமென்று அதிபர் டிரம்ப் கூறினார்

Share

ஈரானை நாளை இரவு கடுமையாக தாக்க போகிறோமென்று  அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் கடந்த 7-ந்தேதி வர்த்தக கப்பல்கள் மீது திடீரென்று ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால், அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்தது. ஈரானின் இந்த தாக்குதல்களை நிறுத்துவதற்காக அந்நாட்டின் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்து உள்ளது. இதுவரை ஈரானில் 30 பேர் பலியாகி உள்ளனர். 260-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என ஈரான் அரசு தரப்பில், அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் உசைன் கெர்மான்பூர் தெரிவித்து உள்ளார். இந்த சூழலில், ஈரானில் உள்ள பாலங்களை குண்டுகளை வீசி தகர்க்க போவது பற்றி தகவல் வெளியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, பென்சில்வேனியா மாகாணத்திற்கு வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் செய்தியாளர்கள் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து பேசும்போது, எங்களுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஈரான் மீண்டும் திரும்ப வேண்டும். அப்படி இல்லையெனில், அடுத்த வாரம் ஈரானின் எல்லை பகுதிகளை தாக்கும் ஒரு பகுதியாக அதன் அணு உலைகள் மற்றும் பாலங்களை இலக்காக கொண்டு தாக்குதல்கள் நடத்தப்படும் என்றார். அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஒன்றை அவர்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். ஈரான் அதனை செய்ய தவறினால், அந்நாட்டில் ஒருவரும் மீதம் இருக்கமாட்டார்கள் என்று டிரம்ப் எச்சரித்தும் உள்ளார். ஈரானை நாளை இரவு கடுமையாக தாக்க போகிறோம் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.