LOADING

Type to search

சினிமா

லோகேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் பாரத்’ அக்டோபர் 1ம் தேதி வெளியாகிறது

Share

லோகேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் பாரத்’ அக்டோபர் 1ம் தேதி வெளியாகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘மிஸ்டர் பாரத்’. யூடியூபில் பிரபலமான நிரஞ்சன் இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘ஃபைனலி’ யூடியூப் சேனல் புகழ் பாரத் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், சுந்தர்ராஜன், லிங்கா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு பிரணவ் முனிராஜ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.