LOADING

Type to search

உலக அரசியல்

இந்திய வம்சாவளியினர் இருவர் பிரிட்டன் அமைச்சர்களாக பதவியேற்றனர்

Share

இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர் பிரிட்டன் அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.  பிரிட்​டனில் கடந்த 2024-ல் நடை​பெற்ற நாடாளு​மன்​றத் தேர்​தலில் தொழிலா​ளர் கட்சி வெற்றி பெற்​றதை தொடர்ந்து அதன் தலைவரான கெய்ர் ஸ்டார்​மர் பிரதம​ராக பதவி​யேற்​றார். 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி பதவி​யேற்ற ஸ்டார்​மர் கடந்த 2 ஆண்டுகளாக பிரதம​ராக பதவி வகித்து வந்​தார். இந்​நிலை​யில் உள்​ளாட்சி தேர்​தலில் தொழிலா​ளர் கட்​சிக்கு ஏற்​பட்ட தோல்வி உள்​ளிட்ட காரணங்​களுக்​காக பிரதமர் பதவி​யில் இருந்து விலகுவதாக ஸ்டார்​மர் கடந்த ஜூன் 22-ம் தேதி அறி​வித்​தார். இதையடுத்து நடை​பெற்ற தொழிலா​ளர் கட்​சி​யின் கூட்​டத்​தில் கட்சி​யின் புதிய தலை​வ​ராக​வும் பிரதம​ராக​வும் 56 வயதான ஆன்டி பர்ன்​ஹாம் போட்​டி​யின்றி தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். கெய்ர் ஸ்டார்​மர் மன்​னர் சார்​லஸை சந்​தித்து தனது ராஜி​னாமா கடிதத்தை சமர்ப்​பித்​தார். இதையடுத்து புதிய அரசை அமைக்குமாறு மன்​னர் சார்​லஸ் விடுத்த அழைப்பை பர்ன்​ஹாம் முறைப்​படி ஏற்​றுக்​கொண்​டார். இந்​நிலை​யில் பிரிட்​டனின் 59-வது பிரதம​ராக ஆன்டி பர்ன்​ஹாம் பதவி​யேற்​றுக் கொண்​டார். புதிய பிரதமரின் கேபினட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர் இடம்பெற்றுள்ளனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த களிஷ்கா நாராயண், 36, மற்றும் விசா நந்தி, 46, பிரிட்டனின் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். ஐரோப்பிய நாடான நாராயண லிசாநந்தி பிரிட்டனின் புதிய பிரதமராக ஆண்டி பர்ஹம் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது புதிய கேபினட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனிஷ்கா நாராயண், லீசாமந் ஆகிய இருவருக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பீகாரின் முசாபர்பூரில் பிறந்த கனிஷ்கா நாள்யண், தன் 12-வது வயதில் பிரிட்டனின் கார்டிட் நகருக்கு பெற்றோருடன் குடிபெயர்ந்தவர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதார படிப்பு முடித்தவர். இவர் பிரிட்டனின் முதல், செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். முந்தைய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அமைச்சரவையில் கலாசாரத் துறை அமைச்சராக பணியாற்றிய லிசா நந்தி, புதிய அமைச்சரவையிலும் அதே பொறுப்பில் நீடிக்கிறார். மான்செஸ்டரில் பிறந்த லிசா நந்தியின் தந்தை தீபக் நந்தி, மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவைச் சேர்ந்தவர்.