அனிருத் குரலில் ‘ஹாய்’ படத்தின் ‘ரசகுல்லா’ பாடல் வெளியானது
Share
நடிகர் கவின் மற்றும் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடிக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ரசகுல்லா’ வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலை, தமிழ் திரையுலகின் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் தனது துள்ளலான குரலில் பாடியுள்ளார்.
விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ மற்றும் ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ நிறுவனங்கள் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநரான விஷ்ணு எடவன் இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கவின், நயன்தாராவுடன் இணைந்து பாக்யராஜ், ராதிகா சரத்குமார், பிரபு மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காதல் மற்றும் துள்ளல் இசையுடன் கூடிய இந்த ‘ரசகுல்லா’ பாடல் தற்போது முதலிடத்தைப் பிடித்து வருகிறது. இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.















