LOADING

Type to search

இலங்கை அரசியல்

செம்மணிப் புதைகுழி தளத்தில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு

Share

– அகழ்வுப் பணிகளை நேரில் ஆராய்வு.

-சர்வதேச விசாரணை கோரி செம்மணியில் மக்கள் போராட்டம்!

ந.லோகதயாளன்.

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து நாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட 8 உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் இன்று புதன்கிழமை நேரில் பார்வையிட்டனர்.

செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியை ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் நேரில் பார்வையிட அனுமதி கோரி, கடந்த வெள்ளிக்கிழமை காணாமல்போனோர் அலுவலகச் சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதனைப் பரிசீலித்த நீதிமன்றம், அன்றைய தினமே அதற்கான அனுமதியை வழங்கியிருந்தது.

இதற்கமைய, இன்று புதன்கிழமை முற்பகல் 9 மணியளவில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோ, ஜேர்மனித் தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியுமன், பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட், இத்தாலித் தூதுவர் டாமியானோ பிராங்கோவிக் மற்றும் நெதர்லாந்து தூதுவர் விபே டி போயர் ஆகியோர் அகழ்வுப் களத்துக்குச் சென்றனர்.

இவர்களுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதித் தூதுக்குழுத் தலைவர் திருமதி கலியா அகிஷேவா, ஒத்துழைப்புப் பிரிவுத் தலைவர் கலாநிதி ஜோஹன் ஹெஸ், தொடர்பாடல் ஒருங்கிணைப்பாளர் செல்வி சாரா பொன்சேகா சில்வா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

சுமார் ஒரு மணித்தியாலம் இந்தப் பகுதியைப் பார்வையிட்ட தூதுவர்கள் குழுவினர், அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிபுணர் குழுவினரையும் சந்தித்துக் கலந்துரையாடி நிலவரங்களைக் கேட்டறிந்தனர்.

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் இன்று வருகை தந்திருந்த நிலையில், அவர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் செம்மணி வளைவுப் பகுதியில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

இந்தப் போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தினர்

உறவுகளை ஆரத்தழுவிக் கண்கலங்கிய
ஐரோப்பிய ஒன்றியத் தூதர் மொரேனோ

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து நாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டுறிந்து மகஜரையும் பெற்றுக்கொண்டனர்.

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளைப் பார்வையிடுவதற்காக, இன்று புதன்கிழமை முற்பகல் 9 மணியளவில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோ, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரிகள் என 8 உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.

தூதுவர்களின் வருகையையொட்டி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரும் சிவில் அமைப்புக்களும் இணைந்து செம்மணி – சித்துப்பாத்தி மயானத்துக்கு முன்னால் ஏ – 9 வீதியோரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, போராட்டம் நடைபெற்ற பகுதிக்குச் சென்ற தூதுவர்கள் குழுவினர், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயான வாயிலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ உறவினர்களை ஆரத்தழுவிக் கண்கலங்கியமையுடன், அவர்களின் கோரிக்கைகளையும் கவனமாகக் செவிமடுத்தார். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் சார்பில் தூதுவர்களிடம் கோரிக்கை மகஜரும் கையளிக்கப்பட்டது.