LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஜனாதிபதி அநுரவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கேற்ப மாகாணத்தின் காணறு இயற்கைச்சூழல் ஆகியவற்றை பாதுகாக்க ‘கிழக்கு மாகாணக் காணிகளைப்பாதுகாத்தல்’ எனும் குழு நியமனம்!

Share

ந.லோகதயாளன்.

கிழக்கு மாகாணத்தில் அரசியல் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோதக்காணி ஆக்கிரமிப்புகள், முறையற்ற காணி நிரப்புதல்கள் மற்றும் கடலோர கட்டுமானங்களைத் தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

​இதற்கமைய, மாகாணத்தின் காணிகளையும் இயற்கைச்சூழலையும் பாதுகாப்பதற்காக ‘கிழக்கு மாகாணக் காணிகளைப்பாதுகாத்தல்’ எனும் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், விசேட பொலிஸ் அலகொன்றையும் நிறுவ அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட விசேட யோசனைக்கே அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

​தென்மாகாண முன்னாள் காணி ஆணையாளரும் தற்போதைய தென்மாகாண உள்ளூராட்சி ஆணையாளருமான சேனக பல்லியகுருகே தலைமையில் இவ்விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

​கிழக்கு மாகாணத்தின் சமூக அமைப்பைக் கருத்திற்கொண்டும் அனைத்துச்சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையிலும் இக்குழுவில் இரண்டு தமிழ்ப்பிரதிநிதிகளும் இரண்டு முஸ்லிம் பிரதிநிதிகளும் மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நியமிக்கப்பட்ட குழுவில்

குழுத்தலைவராக சேனக பல்லியகுருகே,

* உள்ளூராட்சி ஆணையாளர் (தென் மாகாணம்)- உள்ளூராட்சித் திணைக்களம் (தென் மாகாணம்), பி.பி.கஸ்தூரியாரச்சி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் (அம்பாறை)- அம்பாறை பிரிவு, திருமதி. வளர்மதி ரவீந்திரன் மாகாண காணி ஆணையாளர் – மாகாண காணி நிர்வாகத் திணைக்களம் (கிழக்கு மாகாணம்), ஏ.டி.எம். ரஃபீ மாநகரசபை ஆணையாளர் – கல்முனை மாநகரசபை, வசந்த லியனகே பிரதி வனப்பாதுகாவலர் (வடக்கு/கிழக்கு மாகாணம்)- வனப்பாதுகாப்பு திணைக்களம், செல்வி. ஹெஷானி சோமரத்ன உதவிப் பணிப்பாளர் – வனஜீவிகள் பாதுகாப்புத் திணைக்களம், திருமதி. பஞ்சாலி பெர்னாண்டோ சட்ட அதிகாரி – கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம், அனுஷன் முனசிங்க பிராந்திய உதவிப் பணிப்பாளர் (அம்பாறை/மட்டக்களப்பு) தொல்பொருள் திணைக்களம், ஐ.எம். உபயகல்யாண வதிவிட நிறுவன மேலாளர் (முறைமை – சி, தெஹியத்தகண்டிய) – இலங்கை மகாவலி அதிகாரசபை, திரு. எஸ். பரமேஸ்வரன் பிராந்திய உதவிப் பணிப்பாளர் (அம்பாறை) – காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு மற்றும் ஜி.ஆர்.எல். பெரேரா சிரேஷ்ட அளவை அத்தியாட்சகர் (அம்பாறை) – அளவைத் திணைக்களம், எம்.எச்.எம். மஹீர் கனிஷ்ட முகாமையாளர் – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (பாசிக்குடா) ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர்.