LOADING

Type to search

இந்திய அரசியல்

குதிரை பேர வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் பெற்றார்

Share

குதிரை பேர வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் பெற்றார். தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம்பேசி, தமிழக வெற்றி கழக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோர் மீது திருவல்லிக்கேணி காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இருவருக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது. மேலும், மறு உத்தரவு வரும் வரை காலையும், மாலையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. இதற்கிடையே, காவல்துறை தங்களை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் இருவரும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணையின்போது, “முன் ஜாமின் வழங்கப்பட்டு இதுவரை இருவரும் சரணடையவில்லை; சரணடையாத பட்சத்தில் துன்புறுத்தக்கூடாது என எப்படி கோர முடியும்? என நீதிபதி கேள்வி எழுப்பியதுடன், இருவரது மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.