LOADING

Type to search

உலக அரசியல்

தென் கொரியாவில் மனைவிக்கு விவாகரத்து இழப்பீடாக ரூ.6,200 கோடி வழங்க தொழிலதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது

Share

தென் கொரிய நாட்டின் 2-வது மிகப்பெரிய நிறுவனமான ‘எஸ்கே குரூப்’ அதிபர் சே டே-வோன், தனது முன்னாள் மனைவிக்கு விவாகரத்து இழப்பீடாக ரூ.6,200 கோடி வழங்க வேண்டும் என்று சியோல் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தென் கொரியாவின் முன்னணி தொழிலதிபரான சே டே-வோனுக்கும், அந்த நாட்டின் முன்னாள் அதிபரின் மகளான ரோ சோ-இயோங்கிற்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக குடும்ப தகராறு காரணமாக விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்நாட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய இந்த வழக்கில் சியோல் உயர் நீதிமன்றம் தற்போது மிக முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், தொழிலதிபர் சே டே-வோன் தனது முன்னாள் மனைவி ரோ சோ-இயோங்கிற்கு விவாகரத்து இழப்பீடு மற்றும் சொத்துப் பகிர்வாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,200 கோடியை (944 பில்லியன் கொரிய வான்) வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். தென் கொரிய நாட்டின் விவாகரத்து வரலாற்றிலேயே இதுவே மிக அதிகப்படியான இழப்பீட்டு தொகை என்று கூறப்படுகிறது.