LOADING

Type to search

இந்திய அரசியல்

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை எந்தவித முகாந்திரமுமின்றி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கதென கி.வீரமணி கூறினார்

Share

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை எந்தவித முகாந்திரமுமின்றி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திராவிட கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;  தமிழ்நாடு அரசு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை எந்தவித முகாந்திரமுமின்றி, திடீர் என்று கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது – ஜனநாயக விரோதமானது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தஞ்சையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆட்சேபகரமாக பேசியதாகக் கூறி, தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியதாகும். இன்று மதியம் 12 மணி வரை கைது நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியும் கூட, காவல்துறையினர் “அதிவிரைவாக” கைது செய்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவ்வளவு அவசரமாக கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? அவதூறு பேச்சு என்று கருதினால், அதற்கு உரிய சட்ட முறையில் வழக்குத் தொடுத்து, விசாரணை நடத்தி, பிறகு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதுதானே முறையானது! அதுவும், நாளை தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவரை எப்படியாவது அதில் பங்கேற்க செய்யவிட கூடாது என்ற அவசரமே இதற்கு காரணமா என்ற சந்தேகம்தான் பரவலாக எழுகிறது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்க முடியாது. ஆனால், எதிர்ப்பையோ, பொதுவானவர்களின் கருத்தையோ கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், பழிவாங்கும் நடவடிக்கையை தொடர்ந்து செயல்படுத்திவரும் தமிழ்நாடு அரசின் போக்கு கண்டனத்திற்குரியது; இந்தப் போக்கு ஒருபோதும் ஜனநாயக ஆட்சியின் அம்சமும் ஆகாது. இத்தகைய போக்குகள் எதிர்வினையைத்தான் ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.