LOADING

Type to search

உலக அரசியல்

தென்னாப்பிரிக்காவில் கனிம சுரங்கம் இடிந்து விபத்தில் 14பேர் உயிரிழந்தனர்

Share

தென்னாப்பிரிக்காவில் கனிம சுரங்கம் இடிந்து விபத்தில் 14பேர் உயிரிழந்தனர். ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தென்னாப்பிரிக்கா. இந்நாட்டின் வடகிழக்கு மாகாணம் ரஷ்டன்பர்க் நகர் அருகே கைவிடப்பட்ட தனியார் கனிம சுரங்கம் உள்ளது. இந்த கனிம சுரங்கத்திற்குள் நேற்று இரவு நுழைந்த 22 பேர் கனிமங்களை வெட்டி எடுக்கும் பணியில் சட்டவிரோதமாக ஈடுபட்டுள்ளனர்.  

அப்போது, திடீரென சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுனர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த சுரங்க விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.